[3] காண்பவர் கண்டால் கல்லும் கதைபேசும்:
வந்திருந்தவர்களில் பலபேர் சிற்பிகள். தாம் செதுக்க தேவையான சிற்பங்களுக்கு தக பலவித அளவுகளில் கற்களை விலை பேசி வாங்கிக்கொண்டுச்
சென்றனர். கடையின் முன்னே பிரம்மாண்டமான பளிங்கு கல்லொன்று நெடுநாட்களாக இருந்துவந்தது. கடைக்காரன் எத்தனையோ சிற்பிகளுடன் கட்டடக்கலைஞர்களுடன் விலைபேசியும் அதை ஒருவரும் வாங்க முன்வரவில்லை. கடைசியில் இலவசமாக எடுத்துபோகும்படியும் அறிவிப்பு
பலகையொன்றை வைத்தான். எடுத்துபோக பெரும்கூலி கேட்டனர் கூலியாட்கள், தவிர எடுத்துக்கொண்டு போய் என்ன செய்வது? அதனால் அது வாங்கப்படாமல் நெடுங்காலம் கடையை அடைத்துக்கொண்டு இடையூறு செய்துவந்தது.
திடீரென்று ஒருநாள் அந்த கடைக்கு மைக்கல்ஏங்கிலோ விஜயம் செய்தார். அவரொரு புகழ்பெற்ற சிற்பி,ஓவியர், மற்றும் கட்டடக் கலைஞர். கூடவே அவருடன் எண்ணற்ற மாணவர் குழாம் வேறு இருந்தனர்.
வந்தவர் நேராக அந்த பெரும் பளிங்கு கல்லருகே சென்று நீண்டநேரம் ஆராய்ச்சியில் ஈடுபடவே கடைக்காரன் நேராக அவரிடத்தில் வந்து “என்ன ஐயா கல்லை நீங்கள் எடுத்துக் கொள்கிறீரா?” என்று கேட்டான். “ஆம் நான் இதை எடுத்துக் கொள்கிறேன்” என்று
சொன்ன மைக்கேல் ஏங்கிலோ அதை தனது கலைக்கூடத்திற்கு எடுத்துவரும்படி சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஆண்டுகள் பல கடந்தன. கடைக்காரன் இரோம் நகரை அன்றையதினம் சுற்றிக்கொண்டிருந்தான். அச்சமயம் மைக்கலோஏங்கிலாவின் சிற்பக்கூடத்தை கண்டு அதனுள் நுழைந்தான். நுழைந்ததும் ஆங்கிருந்த ஒருமாபெரும் சிற்பத்தை கண்டுவியந்து நின்றான். இயேசுவை தாங்கி நின்ற மேரிமாதாவின் சிற்பம் அது. அதன் கலைநுணுக்கங்களை கண்ணாரக்கண்ட கடைக்காரன் கூடத்திலிருந்த மைக்கலோஏங்கிலாவிடம் அதை பற்றிக் கேட்டுவிட்டு கல்லை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டான்.
அவனை அவர் சற்றுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு விஷமமாக சிரித்தார். “ஐயா உமது கடையில் நீண்டகாலமாக பயனற்றது என போட்டு
வைத்திருந்தீர்களே அந்த கல்லில் செய்த சிற்பம் தான் இது”, என்று
பதில் கூறினார்.
போதனை: எதற்குமே ஒரு காலம் வரவேண்டும். மனமும், உடலும், காலமும் ஒன்றாக
இணையவேண்டும். அப்போதுதான் எந்தவொரு விஷயமும் தன்னிறைவு அடையும்.
No comments:
Post a Comment