Tuesday, October 17, 2023

[4] புலையனின் சாதுர்யம்.

 

[4] புலையனின் சாதுர்யம்

 

கி.பி.900 வருடங்களுக்கு முன்னர் சங்கரர் எனும் ஆதிசங்கரர் இன்றைய கேரளாவின் காலடி எனும் ஊரில் பிறந்து பின்னர் வடக்கே போனவர், அங்கேயே இருந்து தன்னுடைய  `அத்வைதம் 'எனும் தத்துவத்தை உருவாக்கி அதன் வாயிலாக பெளத்த மதத்தத்துவங்களையும் இந்துக்களின் இதர கோட்பாடுகளையும் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியவர்.

 

அத்வைதம் என்றால் இரண்டுமற்ற ஒரேஒரு பிரம்மம். அதாவது பிரபஞ்சத்திலுள்ள, உலகம் மனிதன் ஊன் உயிர் மலை காற்று கடல் முதலிய யாவும் பொய்யே, பிரபஞ்சம் உட்பட; இதை ஞானத்தால் உணர்ந்துக்கொண்டால் பிரம்மம் மட்டுமே உண்மையென்று அறிந்து அதனோடு கலந்து விடுவோம்.

 

இப்படியாக தனது கொள்கையை இந்தியாவெங்கும் நிலைநாட்டிய ஆதிசங்கரர், அதன் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை ஏற்படுத்தியபின், ஒரு நாள் காசி நகரில் இருள் பிரியாத அதிகாலை வேளையில் கங்கை நதியில் குளித்து விட்டு கரையேறி வந்து கொண்டிருந்தார். அவர் வந்த பாதை ஒருவழிப்பாதை. அச்சமயம் எதிரே புலையன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். புலையன் என்றால் சாதிரீதியாக அடிமட்டத்தில் தாழ்த்தப்பட்டவன், வறுமையினால் நாயைக்கூட சாகடித்து உண்பவனாவான்.

 

ஆதி சங்கரருக்கு அந்த இருள் வேளையில் கூட வந்திருப்பவன் யாரென்று புரிந்து போனதால்,  ஹேய் வழியை விட்டு விலகி நில், நான் ஆதி சங்கரன்”, என்று கம்பீரமாக கட்டளையிட்டார்.

 

ஆனால் அந்த புலையன் வழியை விட்டு விலகுவதாக தெரியவில்லை. மாறாக அவன் அவர் எதிரே வந்து நின்று முகம் பார்த்து பேசலானான். “ஐயனே, நீரே உலகெல்லாம் உமது கொள்கையை வாதம் செய்து பரவசெய்து நிலைநிறுத்திய ஆதிசங்கரன் என்பதை நானறிவேன். வழக்கமாக யார் என் எதிரே வந்திருந்தாலும் வழியை விட்டு விலகி இருப்பேன், ஆனால் நீர் ஆதிசங்கரர், அதனால் என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால், வழியை விடுவேன், இல்லாவிட்டால் வழியை விடமாட்டேன்”, என்று சொன்னான்.

 

யாரிவன், எனக்கோ வேலைகள் அதிகம், இந்த நேரத்தில் இப்படி வந்து உயிரை வாங்குகிறானே, எனினும் நான் யார் என்பதை அறிந்திருக்கிறான், அதற்கேனும் இவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், மிஞ்சிப்போனால் என்ன கேட்டுவிடப் போகின்றான்,கேட்கட்டும்' என்று நினைத்த ஆதிசங்கரர்,  ம்ம்ம் கேள்”, என்றார்.

 

புலையன் சிரித்துக்கொண்டே கேள்வி கேட்டான்.  தள்ளிபோ என்றாய்? யாரை தள்ளிப்போகச் சொல்கிறாய்? இருப்பனவற்றில் பிரம்மம் மட்டுமே உண்மையென்று சொன்னாய் அல்லவா? அப்போது நீயும் நானும், உன்னில் என்னில் உறையும் ஆத்மாக்களும் பொய் அல்லவோ? என்னைத்தொட்டால் தீட்டு என்கிறாய்?-இது சரி அல்லது தவறு என்ற விவாதத்திற்குள் இப்பொழுது நுழைய நான் விரும்பவில்லை. -இதை சாதாரண ஆட்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நீயோ அத்வைத்தில் கரைகண்டவன், முற்றும் துறந்த ஞானி, நீ எப்படி என்னை தள்ளிப்போகச் சொல்லலாம்? ஒருவகையில் நீ தான் நான், நான் தான் நீ, ஏனெனில் இறுதியில் நாம் அந்த பிரம்மத்தோடு கலக்கப்போகிறவர்கள் தானே?

 

நீ சொன்ன அத்வைதம் உண்மையென்றால் என்னை தொட்டுக்கொண்டே போ,பொய் என்றால் அதை ஒப்புக்கொள்,வழியை விடுகிறேன், அல்லவெனில் மீண்டும் கங்கைக்கே செல் ,என்ன சொல்லப்போகிறாய்?”

 

சகலவிஷயங்களிலும் கரைகண்டதாக சொல்லப்பட்ட ஆதிசங்கரர், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட புலையனான தாழ்ந்தவனின் கேள்வியால், நிலைகுலைந்து திருதிருவென விழித்து தலைகுனிந்து போனார்.

 

போதனை: யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், உன்னைப்பொறுத்தவரையில் நீயே உனக்கு இராஜா.

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...